Recent posts

காடோடி (Kadhodi) - நக்கீரன் (Nakkeeran)

நூல் வகை - நாவல் (Novel), சூழலியல் (Suzhaliyal)

ஆசிரியர் - நக்கீரன் (Nakkeeran)

காடு என்பது கனவு நிலமோ சுற்றுலாத் தலமோ அல்ல, தாவரங்கள் முதல் தொல்குடிகள் வரை பிணைந்து வாழும் பல்லுயிர் உலகம். இப்புரிதல் இன்றிப் பச்சையம் கொல்லும் தன் பனி நிமித்தம் ஓர் உல்லாசப் பயணிபோல உள்நுழைகிறான் கதைசொல்லி, ஆனால் கண்ணெதிரே மரங்களும் கார்ருயிர்களும் தொல்குடிகளின் வாழ்வும் சிதைவும் கண்டு பதட்டம் கொள்கிறான், மனசாட்ச்சியின் நகங்கள் பிறாண்டுகின்றன, மழைக்காட்டின் மரணத்திற்க்கு சாட்ச்சியாக வாழ நேரும் அவனுடைய துயரமும் அவலமும் இப்பிரதி முழுக்கக் காடோடியாய் அலைந்து திரிந்து அதை வாசகருக்கும் தொற்றவைக்கின்ற்ன.

                தமிழில் இதுவரை யாரும் தொடாத களம்; காட்டழிப்பின் பின்னுள்ள நுண் அரசியலை ஒலியற்ற குரலில் சொல்வதன் மூலம் அழிக்கப்பட்ட காடுகளையும் அழிக்கப்படுகிற காடுகளையும் இந்நாவல் நம் கண்முன்னே விரிக்கிறது. கவிஞரும் சூழலியல் எழுத்தாளருமான நக்கீரனின் முதல் நாவல் இது.

மிகச்சிறந்த நூல். தற்போதைய சூழலில் கட்டாயம் நாம் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

புத்தகத்தை படிக்க கீழே சொடுக்கவும்...
காடோடி

புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...
காடோடி


No comments