ஈழம் இன்று (Eelam Indru) - ப. திருமாவேலன் (P. Thirumavelan)
நூல் வகை - வரலாறு (Varalaru)
எழுத்தாளர் - ப. திருமாவேலன் (P.Thirumavelan)
பதிப்பகம் - விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
மொத்த பக்கங்கள் - 348
பதிப்பு - 3
வெளியான வருடம் - 2009
ஆதியோடு அந்தமாக ஈழத்து தமிழ் மக்களின் உரிமைப் பிரச்னைகளும், சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த மக்களின் உணர்வுகளும், போராளிகளின் வாழ்க்கையும் ‘ஆனந்த விகடன்’ இதழ்களில் கட்டுரைகளாக வெளிவந்து, உண்மை நிலையை உலகறியச் செய்தது! லட்சக்கணக்கான மக்கள் சொந்த மண்ணில் வாழ்வுரிமைக்காகப் போராடி, உயிரிழந்த கொடுமைகளைப் பார்த்து இந்த உலகம் வேதனைப் பெருக்கோடு கண்ணீர் சிந்திக்கொண்டுதான் இருக்கிறது. எத்தனையோ சமாதான முயற்சிகள் தோல்வியடைந்தன. இதையெல்லாம் மீறி இலங்கை அரசாங்கம் செய்தது என்ன? சிங்கள ராணுவம் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீது ஏற்படுத்திய நெருக்கடிகள்தான் அவர்களைப் போராளிகளாக உருவாக்கியது என்பதைச் சுட்டிக்காட்டி, ‘குற்றவாளிகள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறார்கள்’ எனத் தெளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர் திருமாவேலன். தன்மானத்தை மட்டுமே தன்னுடன் வைத்துக் கொண்டு தனி ஈழம் கேட்டு போராடிய தலைவர்களுடன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு இணைப்பு உண்டானது எப்படி? பிரபாகரன் உள்ளிட்ட இளைஞர் படை ஆயுதம் ஏந்திய போராளிகளாக உருவெடுப்பதற்கான திருப்புமுனைச் சம்பவம் என்ன? இலங்கை அரசுக்கும் போராளிகளுக்கும் உள்ள பிரச்னை எப்படி தொடர்கதை ஆனது? பிரபாகரன் இறந்துவிட்டது தொடர்பாக வெளியான முரண்பாடான தகவல்களின் பின்னணி என்ன? _ இப்படி நம் மனதில் எழும் கேள்விகளுக்கு, ஈழத்தின் ஆரம்பகாலம் தொடங்கி இன்றைய நிலை வரை நடந்த நிஜ சம்பவங்கள் இந்த நூலில் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளன. இது ஒரு வரலாற்றுப் பதிவு.
புத்தகத்தை படிக்க கீழே சொடுக்கவும்...
ஈழம் இன்று
புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...

No comments