Recent posts

பாண்டியர் செப்பேடுகள் பத்து (Pandiar Cheppedhugal Pattu) - உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (Ulaga Tamil Aaratchi Niruvanam)

நூல் வகை - வரலாறு (Varalaru)
ஆசிரியர் - உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் (Ulaga Tamil Aaratchi Niruvanam)

தமிழ்நாட்டின் வரலாற்றை அறிய உதவுபவை இலக்கிய சான்றுகள், ஓலைச்சுவடிகள், கல்வெட்டுக்கள், காசுகள், அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள் போன்றவையாகும்.

பாண்டியர் செப்பேடுகள் பத்து என்னும் இந்நூலில் முற்கால பாண்டியர்களின் போர் திறனும், வீரமும், கொடையும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பாண்டிய மன்னர்கள் தமிழை ஆட்சிமொழியாக பயன்படுத்திய பாங்கினை இந்நூலில் காணலாம். அக்கால அரசில் பயன்படுத்திய ஆணத்தி, குடிக்காவல், நாயகன், கணக்கர், திருமந்திர ஓலை, திருவாய் கேள்வி கரனத்தார் போன்ற பல கலைச்சொற்கள் இச்செப்பேடுகள்  மூலம் தெரிய வருகின்றன.

கொடை வழங்கிய மன்னர் அக்கொடை தொடர்ந்து நடைபெற வேண்டும் என விரும்பி வேண்டுவதை காணலாம். "மற்றிதனைக் காத்தார்தம் மலரடி என் மடிமேலன என்று கொற்றவனே பணித்தருளி" என்னும் சொற்றொடர் குறிப்பிடத்தக்கது. வழங்கப்படும் ஆணையை நிறைவேற்றுவதற்கு ஓர் "ஆணத்தி" நியமிக்கப்படுகிறார். ஒதுக்கப்படும் நிலத்திற்கு நான்கு பக்க எல்லை தெளிவாக குறிப்பிடப்படுகிறது. அவ்வெள்ளை நிலைத்திருக்க கல் நடப்படுகிறது. கள்ளிச்செடியும் நடப்படுகிறது. அதற்கு முன் வெள்ளை கோட்டில் பெண் யானை மீது ஏறிக்கொண்டு அதனை நடக்கச் செய்கிறான் யானை படைத்தலைவன் அவன் பெயரையும் பட்டயம் குறிப்பிடுகிறது

வேலங்குடி என்ற பழைய பெயர் நீக்கப்படுகிறது ஸ்ரீ வர மங்கலம் என்ற புதுப் பெயர் சூட்டப்படுகிறது இஞ்ஞனம் நம் தமிழ்நாட்டில் பல ஊர்களின் தமிழ்ப் பெயர்கள் மாறி வடமொழிப் பெயர்களை பெற்ற வரலாற்றை இந்நூலின் மூலம் அறியலாம்.

புத்தகத்தை படிக்க கீழே சொடுக்கவும்...
பாண்டியர் செப்பேடுகள் பத்து

புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...
பாண்டியர் செப்பேடுகள் பத்து

No comments