Recent posts

சீன இதிகாச கதைகள் (China Ithigasa Kathaigal)

நூல் வகை - கதைகள் (Kathaigal)

எழுத்தாளர் - ஏவி.எம். நஸீமுத்தீன் (Av.M. Nazimuddin)

பதிப்பகம் - கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)

மொத்த பக்கங்கள் - 123

பதிப்பு - 1

வெளியிட்ட வருடம் - 2015

உங்கள் கற்பனைத் திறனைப் பலமடங்கு அதிகரிக்கப்போகும் சீனக் கதைகள் இவை.

விதவிதமான கடவுள்கள், அச்சுறுத்தும் பலவகை பிசாசுகள், டிராகன்கள், மாயாஜாலங்கள் நிகழ்த்தும் அதிசய உயிர்கள் என்று பலவிதமான கதாபாத்திரங்களை இதில் சந்திக்கப் போகிறீர்கள்.

ஆண்டாண்டு காலமாகப் பல தலைமுறைகளால் தொடர்ந்து சொல்லப்பட்டு வந்த கதைகள் இவை. இன்றளவும் அந்நாட்டு மக்கள் இவற்றைத் தங்களுடைய பாரம்பரிய செல்வமாகக் கருதிப் போற்றியும் பாதுகாத்தும் வருகின்றனர்.

ஏன் என்பது இவற்றை வாசிக்கத் தொடங்கும்போதே தெரிந்துவிடும். ஆம், வெறுமனே கதைகள் மட்டுமல்ல இவை. சீனா என்னும் புராதன நாகரிகத்தின் மணிமகுடங்களாகத் திகழும் பலதரப்பட்ட இதிகாசங்கள் இதில் அடங்கியுள்ளன.

வெறுமனே கதைகளாக ரசித்து மகிழலாம். அத்துடன் பண்டைய சீன மக்களின் இலக்கியம், கலை, காதல், வழிபாடு, ஆட்சிமுறை, நிர்வாகம் ஆகியவற்றைப் பற்றிய ஒரு எளிமையான புரிதலையும் பெறலாம்.

வாய்மொழிக் கதைகளாகத் தொடங்கி உலகம் முழுவதையும் வசப்படுத்திய அதிசயக் கதைகள் உங்களை அன்புடன் வரவேற்கின்றன.

புத்தகத்தை படிக்க கீழே சொடுக்கவும்...
சீன இதிகாச கதைகள்

புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...
சீன இதிகாச கதைகள்

No comments