Recent posts

பாண்டியர் வரலாறு (Pandiar Varalaru) - ம. இராஜசேகர தங்கமணி (M. Rajasekara Thangamani)


நூல் வகை - வரலாறு (Varalaru)
ஆசிரியர் - ம. இராசசேகர தங்கமணி (M. Rajasekara Thangamani)

நில மடந்தையின் திலகம் என திகழ்வது தமிழ்நாடு. இது சேர சோழ பாண்டியர் எனும் முடியுடை மூவேந்தர்களால் ஆளப்பட்டு வந்தது. இம்மூவரில் பாண்டியர் தொன்மை மிக்கவர். சங்கம் வைத்து துங்க தமிழ் வளர்த்த இவர்கள் முத்து  வாணிகத்திலும் தலை சிறந்து விளங்கினர். சங்ககாலத்திற்கு முன்பே இவர்கள் மேம்பட்ட நாகரீகத்தை பெற்றிருந்தனர் என்பதனை ஆதிச்சநல்லூர், சாயர்புரம், கொற்கை முதலான இடங்களில் இடம்பெற்ற அகவாழ்வில் தெரிய வருகிறது.

கடைச்சங்க காலத்திற்கு முன்பே, தமது ஆட்சியை நிறுவியவர்கள் சில இடைவெளிகள் இருப்பினும் கிபி பதினேழாம் நூற்றாண்டு வரை பாண்டிய நாட்டினை ஆண்டுவந்தனர் தமிழக வரலாற்றில் ஏன் உலக வரலாற்றிலும் கூட இவர்களைப் போன்று நீண்ட நெடுங்காலம் தொடர்ந்து ஆண்டதொரு பேரரசினை நாம் காண இயலவில்லை

அண்மைக்காலத்தில் கிடைத்துள்ள எண்ணிறந்த கல்வெட்டுச் சான்றுகள், அகழ்வாய்வுகள், இலக்கிய ஆதாரங்கள், அறிஞர் பெருமக்கள் ஆய்வுக்கட்டுரைகள் ஆகியவற்றின் அடிப்படையில் எனது நீண்ட நாளைய ஆராய்ச்சியையும் சேர்த்து பாண்டியர் வரலாற்றில் புத்தொளி பாய்ச்ச முற்பட்டு உள்ளேன். பாண்டியர் நிகழ்த்திய போர்கள் பற்றிய விவரங்களை அதையும் பொறுத்து போர்கள் நிகழ்ந்த ஊர்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்து புதிய செய்திகளையும் இந்நூலில் தந்துள்ளேன் இதுகாறும் வெளியிடப்படாத கல்வெட்டுக்கள் சிலவற்றை எடுத்து இணைத்துள்ளேன்.

- ம. இராஜசேகர தங்கமணி

புத்தகத்தை படிக்க கீழே சொடுக்கவும்...
பாண்டியர் வரலாறு

புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...
பாண்டியர் வரலாறு


No comments