Recent posts

எனது நாடக வாழ்க்கை - அவ்வை தி.க. சண்முகம் எம்.எல்.சி

நூல் வகை - சுயசரிதை (Suyasarithai)
ஆசிரியர் -  அவ்வை தி.க. சண்முகம் எம்.எல்.சி      ( Avvai Thi.Ka. Shanmugam M.L.C.)


சண்முகத்தின் வாழ்க்கை எப்படிப்பட்டது? நான்குவயதில் அவர் நாடகநடிகராக ஊர்கள் தோறும் அலைய ஆரம்பித்துவிட்டார். தமிழ்நாட்டில் அவரது கால்கள் படாத பெரிய ஊர்களே இருக்க இயலாது. அபப்டியே அரை நூற்றாண்டுக்காலம்! கடைசியில் அவர் தன் வரலாற்றை எழுத ஆரம்பிக்கும்போது அவ்வரலாறு மனித முகங்களின் கொந்தளிப்பாக இருக்கிறது. சண்முகத்தின் வழியாக காலத்தில் மறைந்த மனிதர்களின் குரல்களும் முகங்களும் ஓடி மறைகின்றன. நூலைப்படித்து முடிக்கும்போது ஒரு காலகட்ட வரலாற்றைக் காட்டிவிட்டு ஒளி சுருங்கி அணைந்த தொலைக்காட்சிப்பெட்டியைப் பார்த்த உணர்ச்சியே ஏற்படுகிறது

விதவிதமான மனிதர்கள். கலைகளுக்கே உரிய வசீகரத்துடன் நாடகம் மனிதர்களை பித்துப்பிடிக்கச் செய்கிறது. கலைஞர்களை வேறு ஏதோ உலகைச் சேர்ந்தவர்களாக எண்ணி வழிபடும் மனிதர்கள்.

சண்முகத்தின் இந்தச் சுயசரிதையை வாசிக்கும்போது பாலநாடகசபாக்களின் கடைசிக்காலத்தை காண முடிகிறது. ஒவ்வொரு திரையாக மடேர் மடேர்ன்று சரிந்து விழுந்து அரங்கு நம் பார்வை முன் இல்லாமலாகும் அனுபவம். சண்முகம் அதில் மயிரிழையில் தப்பித்த சிலரில் ஒருவர்.

- ஜெயமோகன்

புத்தகத்தை படிக்க கீழே சொடுக்கவும்...
எனது நாடக வாழ்க்கை

புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...
எனது நாடக வாழ்க்கை

No comments