கூகுள் உருவான கதை! - என். சொக்கன்
நூல் வகை - தன்னம்பிக்கை (Tannambikkai), சரித்திரம் (Sarithiram), வரலாறு (Varalaru)
ஆசிரியர் - என். சொக்கன் (N. Sokkan)
கூகுளின் வடிவமைப்பு சாதாரணமாகத் தோன்றினாலும், தொழில்நுட்பம் மட்டும் இன்றுவரை முதல் தரத்தில் இருக்கிறது. இணையத்தில் வார்த்தைகளைத் தேடுகிற வேகம், பொருத்தமான விடைகளை அடுக்கித் தரும் புத்திசாலித்தனம் ஆகியவற்றில் யாரும் கூகுளுக்குப் பக்கத்தில் வரமுடியாது.
நம் வீட்டில், பள்ளியில், கல்லூரியில், அலுவலகத்தில் பல பொருள்களை ஆங்காங்கே மறந்து வைத்துவிட்டுத் தேடுகிறோமே, அதையெல்லாம் சுலபமாகக் கண்டுபிடிப்பதற்கு, கூகுள்போல ஒரு தேடும் இயந்திரம் இருக்கக்கூடாதா என்கிற ஏக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
லாரியும் செர்கேயும் உருவாக்கிய தேடு இயந்திரம் ‘நிஜ மனிதனைப் போன்ற’ புத்திசாலித்தனத்துடன் இயங்கியது. அதுதான், இன்றைய கூகுளின் முதல் வடிவம்!
இணைய இணைப்புகளை, நிஜ வாழ்க்கையில் நம்முடைய ஆள்காட்டி விரலுக்கு இணையாகச் சொல்லலாம். அதாவது, ‘பள்ளிக்கூடம் எங்கே?’, என்று ஒருவர் நம்மிடம் கேள்வி கேட்டால், ‘அதோ அங்கே’, என்று விரலால் சுட்டிக்காட்டுகிறோமே, அதன் கணினி வடிவம்தான் இந்த இணைப்புகள், சிலர் இவற்றைச் ‘சுட்டிகள்’ என்றும் செல்லமாகக் குறிப்பிடுவார்கள். இணையத்தில் ஒவ்வொரு பக்கமும், வேறு சில பக்கங்களுக்கு இணைப்புத் தருகிறது.

‘தீமையானதைச் செய்யாதே’ என்ற விதிப்படி, வருமான இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, தேடல் விடைகளில் எக்காரணம் கொண்டும் விளம்பரதாரர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, அவர்களுடைய இணையப் பக்கங்களைக் காண்பிக்கக்கூடாது என்று முடிவெடுத்தது கூகுள். கூகுளின் மகா வெற்றிக்கு, இந்த எளிய சூத்திரமும் ஒரு முக்கியமான காரணம்!
கூகுளின் வளர்ச்சியை அதன் புதிய தயாரிப்புகளைப் பட்டியலிடுவதன் மூலமே சொல்ல முடியும். அந்த அளவுக்குத் தொடர்ந்து புதுப்புது விஷயங்களை அறிமுகப்படுத்திக் கலக்கிக் கொண்டிருக்கிறது கூகுள்.
கூகிள் உருவான கதை!
நூலாசிரியர்: என்.சொக்கன்
மொழி: தமிழ்
நூல் வகை: தன்னம்பிக்கை, சரித்திரம், வரலாறு
பக்கங்கள்: 64
புத்தகத்தை படிக்க கீழே சொடுக்கவும்...
கூகுள் உருவான கதை!
புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...

No comments