வீரவேங்கை தீரன் சின்னமலை - கவிஞர் இல. வேடி
நூல் வகை - வரலாறு (Varalaru)
ஆசிரியர் - கவிஞர் இல. வேடி (Kavignar Ela. Vaydhi)
தமிழகம் இதுவரை எத்தனையோ வீரபுருஷர்களைக் கண்டுள்ளது. அவர்கள் அனைவருமே நம் வரலாற்றில் இடம் பெறுவதில்லை. ஏன் என்றால் வரலாற்றை பதிவு செய்பவர்கள் தங்கள் ஆட்சியாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வரலாற்றை மாற்றியோ, மிகைப்படுத்தியோ பதிவு செய்கின்றனர். சில வரலாற்று நிகழ்வுகள் பதிவு செய்யபடாமலே புறக்கணிக்கப்படுகின்றன. இப்படி புறம் தள்ளப்பட்ட வரலாற்றின் வீரர்கள், மக்கள் மனதில் இடம் பெற்றவராக இருந்துவிட்டால்? மக்கள் தங்களுடைய மனதில் அவ்வீரனுக்கு நீங்கா இடம் அளிப்பதோடு, அவரின் வீரமிக்க தீரசெயல்களை பல வகையில் வெளிப்படுத்துவர், என்றும் போற்றி புகழ்வர்.
நம் சரித்திரத்தில் புறம் தள்ளப்பட்டு மக்கள் மனதில் நீங்க இடம்பெற்றவர்களில் தீரன்சின்னமலையும் ஒருவர். அன்றைய கொங்கு மண்டலத்தின் ஒரு பகுதியான மேலப்பாளையம் ஜமினின் படைத்தலைவராக இருந்து ஆங்கிலேயருக்கு எதிரான மைசூர் போரில் பங்கெடுத்த தீரன்சின்னமலை பற்றிய கிராமிய பாடல்கள் மற்றும் செவி வழி செய்தியின் மூலமாகவே இவரின் வரலாற்றை நம்மால் அறிய முடிந்தது.
தீரன்சின்னமலை பற்றி இன்று பல நூல்கள் வந்திருந்தாலும் ‘வீரவேங்கை தீரன்சின்னமலை’ என்ற இந்த நாடக நூலை எழுதிய ஆசிரியர் திரு. இல. வேடி அவர்கள் மாத்தி யோசி என்ற மந்திர வார்த்தையால் பலரின் வாழ்க்கைக்கு வழிகாட்டிய, இரா. பெருமாள் ராசு அவர்களின் தூண்டுதலினால் தமது புதுக்கவிதைகளை ‘கனவுகலுக்கு தூக்கமில்லை’ என்ற நூலாக வெளியிட்டுள்ளார். இரண்டாவது நூலாக ‘வீரவேங்கை தீரன்சின்னமலை’ என்ற சரித்திர நாடக நூலை எழுதியுள்ளார். வரலாற்று ஆதாரங்கள் மற்றும் கிராமிய பாடல்களை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட இந்நூல் தீரன்சின்னமலையின் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு சிறந்த நூல்.
வழக்கமான நாடக நூல்களில் இருந்து மாறுபட்டு வாசிப்பதற்கு ஆர்வத்தை தூண்டு விதமாக அமைந்துள்ளது இவரது எழுத்து நடை. சரித்திர கதைகளை விரும்பும் அனைத்து வாசகர்களையும் கவரும்.
புத்தகத்தை படிக்க கீழே சொடுக்கவும்...
வீரவேங்கை தீரன் சின்னமலை
புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...

No comments