Recent posts

தாயம்மாப் பாட்டியின் நாற்பத்தோரு கதைகள் - யுவன் சந்திரசேகர்

நூல் வகை - சிறுகதை (Sirukathai)
ஆசிரியர் - யுவன் சந்திரசேகர் (Yuvan Chandhirasekar)


இங்க ஒரு நாய் வளர்ந்தது. கறுப்பன்னு பேரு. நல்ல சூட்டிகை. தாத்தா கூடவே போகும், வரும். வீட்டுக்குள்ளேயே வராது. வாசலோட சரி. அந்நிய மனுஷர் ஒருத்தரை அண்டவிடாது. காமாட்சி கைக்குழந்தை. மத்தியானம் பக்கத்துல விட்டுக்கொண்டு பால் கொடுக்கறேன். கறுப்பன் திடீர்னு வீட்டுக்குள்ளே பாய்ஞ்சு வர்றது. ஏது, இப்படிப் பண்ணாதேன்னு நெனச்சு முடிக்கல, தொட்டி முற்றத்துல கருநாகம். கறுப்பன் பாய, அது சீற, நான் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியிலே ஓடிட்டேன். அக்கம்பக்கத்திலே இருந்து மனுஷரெல்லாம் வந்து பாத்தப்போ பாம்பு கண்டதுண்டமாக் கிடக்கு. பக்கத்துலே கறுப்பனும் வாயிலே நுரை தள்ளிக் கிடக்கு. எனக்கானால் துக்கம் முட்டுகிறது. என் குழந்தைன்னா பாம்புகிட்ட அப்படி விட்டுட்டுப் போயிருப்பேனா? இப்போ நெனச்சாலும் அவமானமா இருக்கு. கறுப்பன் மட்டும் இல்லேன்னா உனக்குக் கதை சொல்லப் பாட்டி கிடையாது இப்போ.

புத்தகத்தை படிக்க கீழே சொடுக்கவும்...
தாயம்மாப் பாட்டியின் நாற்பத்தோரு கதைகள்

புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...
தாயம்மாப் பாட்டியின் நாற்பத்தோரு கதைகள்

No comments