Recent posts

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் - ஜெயகாந்தன்

நூல் வகை - நாவல் (Noval)
ஆசிரியர் - ஜெயகாந்தன் (Jeyakanthan)

'காதல் என்பது ஒருவரையொருவர் ஆக்கிரமிப்புச் செய்து, அதில் இன்பங்கண்டு, அன்பின் ஆழத்தினை பரிசோதித்துக் கொள்ளும் உறவுமுறை' என அனைவரும் தம் அகத்தின் ஏதோ ஒரு மூலையில் நிறுவி வைத்திருக்கும் அடிப்படைச் சிந்தனையை உடைத்துப் போடுகிறது இந்த நாவல்.

ஜெயகாந்தனின் பார்வையில் இன்டெலெக்சுவல் காதலும் அழகு, அதனால் ஏற்படும் பிரச்சினையைத் தங்களின் புரிதல் மூலம் எப்படித் தாங்களே தீர்த்துக் கொள்ள முயல்கிறார்கள், முரண்படுகிறார்கள் என்பதைத் தனது நடையில் அவர் சொல்லிய விதமும் அழகு. அதுவும் அந்தக் 'கல்யாணி' எனும் கதாப்பாத்திரத்தை அவர் நமக்குத் தந்திருக்கிற விதம், 'What a woman' என உள்ளுக்குள்ளே ஒருமுறை சொல்லிப்பார்க்க வைக்கிறது.

ஜெயகாந்தனைப் போல் மனித மனங்களுக்குள் புகுந்து புறப்படுவதற்கு இன்னொரு மனிதர் பிறந்து தான் வர வேண்டும். இது என்னுடைய மிகப் பிடித்த புத்தகங்களில் ஒன்று.. மனித மனங்களையும், உறவுகளையும் அழகாக படம் பிடித்துக் காட்டுவது.

ஒருவரை ஒருவர் நேசிக்கும் கணவன்-மனைவியிடையே ஏற்படும் மனத்தாங்கல்களையும் அதன் பின்னர் நடக்கும் நிகழ்வுகளையும் மிக அழகாக வர்ணித்திருப்பார் ஜெயகாந்தன். ஒரு எழுத்தாளனுக்கு கிடைக்கும் மிகப் பெரிய வெற்றியே அவனது கதையில் வரும் கதாபாத்திரங்களை மக்கள் மனதில் நிலைபெறச் செய்வதுதான்.

இந்நாவலில் வரும் கல்யாணியும் ரங்காவும் வாசகர்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் பாத்திரங்களை படைத்திருக்கின்றார் ஜெயகாந்தன். மிக ஆதர்ச பாத்திரப்படைப்பு கல்யாணியுடைது. ரங்காவின் பாத்திரத்தில் ஆண் பெண் யாராயினும் பொருத்ததுக்கு உரியது.

புத்தகத்தை படிக்க கீழே சொடுக்கவும்...
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...
ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்

No comments