Recent posts

சூலூர் வரலாறு - மகுடேசுவரன்

நூல் வகை - வரலாறு (Varalaru)
ஆசிரியர் - மகுடேசுவரன் (Magudasuvaran)


சூலூர் வரலாறு என்னும் நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். புலவர் செந்தலை ந. கவுதமன் பதிப்பித்த இன்றியமையாத நூல். நூலில் சுவையான செய்திகள் பல இருக்கின்றன.

சோழர்களின் ஆட்சிக் காலத்தில் ‘இராசராசபுரம்’ என்ற பெயரில் மூன்று நகரங்கள் உருவாக்கப்பட்டனவாம். சோழ நாட்டில் ஒன்று. கொங்கு நாட்டில் ஒன்று. பாண்டி நாட்டில் ஒன்று. அம்மூன்று நகரங்களும் பிற்காலத்தில் ‘இராசராசபுரம்’ என்ற பெயரிலிருந்து மருவி வேறு பெயர் பெற்றனவாம்.

சோழ நாட்டு இராசராசபுரம் தாராசுரம் ஆயிற்றாம். கொங்கு நாட்டின் இராசராசபுரம் தாராபுரம் ஆயிற்றாம். பாண்டி நாட்டில் அமைக்கப்பட்டது ராதாபுரம் ஆயிற்றாம்.

சூரலூர் என்ற பெயரே பிற்பாடு மருவி சூலூர் ஆனது. சூரல் என்பது ஒருவகைக் கொடிப்பூ. நொய்யாலாற்றங்கரையில் சூரற்கொடிகள் மிகுந்திருந்ததால் சூரலூர் எனப்பட்டதாம். சூரலூராகிய அரியபிராட்டி நல்லூர், சுந்தரபாண்டிய நல்லூர் என்பவையே சூலூரின் பழைய பெயர்கள். நல்லூர் என்று ஓர் ஊர்ப்பெயர் முடியுமாயின் அது கோவிலுக்குக் கொடையாகத் தரப்பட்ட ஊர் என்கிறார்.

அன்றைய சூலூரில் மணமாகாத ஆண்கள் சிரைக்கக்கூடாதாம். மணமாகாத பெண்கள் சிற்றாடைதான் அணிய வேண்டும். இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு சந்திர குப்தனின் கிரேக்க மனைவி கால்முழுக்க மூடுமாறு அணிந்திருந்த உடைதான் எல்லாராலும் விரும்பப்பட்டு பிற்காலத்தில் புடவையானதாம்.

பல்லன் என்னும் இருளன் இருந்த இடம், பல்ல இடம் பல்லடம் ஆனதாக ஒரு செய்தியைக் கூறுகிறார். கொங்கு நாட்டின் இருபத்து நான்கு நாடுகளில் சூலூர் ‘வாயறைக்கால்’ நாட்டுக்குரியது. இன்றைய கோயம்புத்தூர் ‘ஆறை நாட்டுக்கு’ உரியது. திருப்பூரானது ‘பொங்கலூர் நாட்டைச்’ சேர்ந்ததாக இருக்கக்கூடும். படைகள் தடைதாண்ட முடியாமல் திரும்பிய ஊர், திரும்பு + ஊர் = திருப்பூர் ஆயிற்று என்னும் விளக்கத்தையும் நூலில் காண முடிகிறது.

(படத்தில் உள்ளதுதான் சூரல் கொடி என்கிறது இணையம்)

-மகுடேசுவரன்

புத்தகத்தை படிக்க கீழே சொடுக்கவும்...
சூலூர் வரலாறு


புத்தகத்தை பதிவிறக்க கீழே சொடுக்கவும்...
சூலூர் வரலாறு

No comments